R.R.சிவக்குமார்

சிவசித்தனே சரணம்

வணக்கம்,

என்னுடைய பெயர் : R.R.சிவக்குமார், வயது : 48, எனக்குத் தொழில் வெளியூர்களில் என்பதால்,  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் என்னுடைய உணவுமுறையில், தேவையில்லாத அசைவ உணவு உட்பட எளிதில் ஜீரணமாகாத பல உணவுகள் உட்கொண்டதால் எனது உடல் நோய்வாய்பட்டு பலவிதமான  துன்பங்களை கொடுத்தது. கடந்த 2007–ம் ஆண்டு முதல் உடல் தொந்தரவுகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் கெட்டக்கொழுப்பு, வயிற்றுக்குடல்புண்(அல்சர்), சர்க்கரை நோய் ஆகியவை உள்ளன என்று மருத்துவர்கள் கூறியதால் ஒரு நாளைக்கு சுமார் 8 மாத்திரை, மாதத்திற்கு நான்கு ஊசிகள் என்று ஆங்கில மருத்துவ வைத்தியம் எடுத்துக்கொண்டதால் எனக்கு உடலில் மேலும் பக்கவிளைவுகள் ஏற்பட்டு நரம்புத் தளர்ச்சியும் ஏற்பட்டது. என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியானது. இதனால் நான் மிகவும் துன்பப்பட்டு வாழ்க்கையே வெறுத்து வாழ்ந்துக்கொண்டிருந்தேன். இதன் விளைவாக…..

கடந்த 12.08.2012ம் தேதி அன்று என் உறவினர் மற்றும் நண்பர்களால் மதுரை சின்ன அனுப்பானடி, சிந்தாமணியில் உள்ள சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையில் (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) சேர்ந்து, சிவசித்தன் அவர்களால் நாடி பார்க்கபட்டு, சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை நான் கற்றுக் கொண்டதன் மூலம், என் உடம்பில் உள்ள அனைத்து தொந்தரவுகளும், துன்பங்களும் நீங்கி நாளது தேதி 4½ ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு மருந்தும் மாத்திரையும், ஊசியும், இரத்தப்பரிசோதனை, ஸ்கேன் போன்ற செலவுகளின்றி இன்றுவரை நானும் என் குடும்பத்தாரும் நலமாக வாழ்ந்து வருகின்றோம். நான் அடைந்த உண்மையான பலனும் பயனும் இதுவே ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மக்கள் அனைவரும் தேவையற்ற உணவுகளை உட்கொள்ளாமல், சிவசித்தனின் செவ்வானப்பிரபஞ்சக்கலையை கற்றுக்கொள்ள வாருங்கள்.

வளம்பெற்று வளமான வாழ்வை வாழ்ந்து உண்மையான உணர்வை உடலான தேகத்தில் வளப்படுத்தி வாழ்ந்து நலம் பெறுக.

 

பெயர் : R.R.சிவக்குமார், வயது : 48,

வாசியோக வில்வம் எண் : 12 08 016

முகவரி : 5, சிலுவை வைத்தியர் சந்து, மதுரை – 1.

அலைபேசி : +91 98439 81277

ஸ்ரீ வில்வம் யோகா மையம்

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக் கலை

3/ 75 – C, சிந்தாமணி, மதுரை – 625 009.

 

. நன்றி சிவசித்தனே