R.ரவி

சிவசித்தனே சரணம்

வணக்கம் சிவசித்தனே

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, மதுரை.

என் பெயர்      : R.ரவி

வில்வம் எண்   : 10 07 008

முகவரி        : HMS காலனி, மதுரை.

 

கடந்த 6½  ஆண்டுகளாக சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை செய்து நலமுடன் வாழ்ந்து வருகிறேன்.

நான் TVS ரப்பர் தொழிற்சாலையில் 25 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். எனக்கு 1993 ல் திருமணம் நடைபெற்றது.

திருமணமான புதிதில் என் மாதச் சம்பளம் ரூ.1500/- வாடகை வீட்டில் குடியிருப்பதால் அதற்கும் செலவு ரூ. 500/- எனக்கு வருவாய் போதாமல் தினசரி 4 மணிநேரம் ஓவர்டைம் பார்த்து அச்செலவுகளை சரி செய்தேன்.

தொடர்ச்சியாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் குடும்பச் செலவுகளை சரி செய்ய ஓவர்டைம் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டியதாயிற்று.

அதன் விளைவு கழுத்து வலி, சுகர்அளவு கூடி, தொண்டைப் புண் போன்ற நோய் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளானேன். இதன் விளைவாக வேலை பார்க்குமிடத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியதாயிற்று. ஆங்கில வைத்தியம், ஹோமியோபதி போன்ற இருமருத்துவ முறைகளில் 7,8 ஆண்டுகளாக பணம் வீணாகச் செலவாகியது.

தொழிற்சாலையில் 3 ஷிப்ட்களாகப் பணிபுரியும் போது, உணவுமுறைகள் மாறி, மாறி வரும் ஒரு நாளைக்கு நான்கு வேலைகள் உணவு எடுத்துக் கொள்வது போலக்கூட வரும்.

நண்பர் மூலமாகக் கேள்விப்பட்டு, சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையில் (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) சேர்ந்து சிவசித்தன் நாடி பார்த்துப் பயிற்சிகள் வழங்கினார்கள்.

சிவசித்தன் கொடுத்த பயிற்சிகளை தொடர்ச்சியாகச் செய்ததன் பயனாக கழுத்துவலி குறைந்தது, சுகர்அளவு குறைந்தது, தொண்டைப் புண் மறைந்து இது நாள்வரை நலமாக பயிற்சிகள் செய்து வருகிறேன்.

விடுமுறை எடுக்காமல் என் பணியைச் செவ்வனே செய்து வருகிறேன்.

சிவசித்தன் விதிமுறைகளின்படி என் மனைவி சரியாக உணவு சமைத்துக் கொடுக்காததால் அதாவது காலை 8.30 மணி, மதியம் 1.30 மணி, இரவு 8.30 மணிக்கும் உண்ண வேண்டிய உணவுகளை சரியான நேரத்திற்கு செய்து கொடுக்காததால் மன உளைச்சலாகி உடல் பாதிப்பு அடைந்தது. இதுபோக எனது மனைவி, நான் கூறும் எந்த ஒரு செயலையும் ஏற்றுக் கொள்ளாததால் குடும்பத்தில் குழப்பம் நிலவியே வந்தது.

எனது பணியின்படி ஷிப்ட்ப்படி என் மனைவி உணவு செய்து தராததால் மேலும் எனக்கு மனஅழுத்தம் அதிகமானது.

சிவசித்தன் எனக்கு வழங்கிய பயிற்சிகள் மூலம் நலமாக வாழ்ந்து வரும் நான், என் மனைவியின் ஒத்துவராத நிலை மேலும், தொடரும் போது விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஐந்து ஆண்டுகள் தாம்பத்யம் இல்லாத நிலையில், போன வாரம் ஒரு நாள் தாம்பத்யத்தில் ஈடுபட்டேன்.

சிவசித்தன் எங்களுக்கு வகுத்துக் கொடுத்துள்ள செயல்முறைகளான (வாசியோகப் பயிற்சிமுறை, வாசியோக உணவுமுறை, சிவசித்தனின் திருநாமங்கள்) ஆகியன பின்பற்றி 6½ ஆண்டுகள். எந்தவித மருத்துவமனைக்கும் செல்லாமல், நாலமாக வாழ்ந்து வரும், எனக்கு என் மனைவி ஒத்துழைப்பு நல்கி, ஆரோக்கிய வாழ்வு வாழ சிவசித்தனை பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

தொடர்ந்து 2016, 6½ ஆண்டு சிவசித்தன் கற்றுக்கொடுத்த கலையை தினந்தோறும் தொடர்ந்து செய்துவந்தாலும், சிவசித்தனின் செயல்முறைகளை செய்யாத என் மனைவி இல்லறத்தில் சரிவர இல்லாததால் தாம்பத்யம் என்பது ஐந்து ஆண்டுகளாக எங்களுக்குள் இல்லாத காரணத்தால் முறையாக வாசியோக பயிற்சி செய்தும், எனது உடல் வெப்பம் அதிகமாகி உடல் முழுவதும் அம்மைபோட்டு அதனால் கடும் துன்பமடைந்தேன். என் மனைவியின் ஒத்துழைப்பு இன்மையால் நான் வேலை செய்த கம்பெனிக்கும் 1 மாத காலம் விடுமுறை எடுத்தும் மாதச்சம்பளம் குறைந்து, சிவசித்தனின் குருகுலத்திற்கும் வரமுடியாமல் போனது.

 

நன்றி சிவசித்தனே.