M.G.கல்யாணசுந்தரம்

சிவசித்தனே சரணம்

என் பெயர் : M.G.கல்யாணசுந்தரம்

வில்வம் எண் : 11 02 001

என் வயது : 67

விலாசம் : காமராஜர் சாலை, மதுரை.

அலைபேசி எண் : +91 88256 03338

வணக்கம் சிவசித்தனே

நான் சிந்தாமணி சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) நோக்கி ஏழு ஆண்டுகளுக்கு முன் வரும்போது வாழ்வின் இறுதி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அறுபது வயதில் நடக்க முடியாத நடைபிணம் போல் இருந்த என்னை, சிவசித்தனிடம்  முன்னாள் தொண்டுசெய்பவர் (வீரமணி) என்னை மாடிக்கு தூக்கி வந்தார்.

 

அவ்வளவு மோசமான நிலையில் உடல் முழுவதும் வியாதிகள், ராஜஉறுப்புகள் ஏறத்தாழ 99% செயல் இழந்துவிட்டது. மருத்துவர்கள் முடியாது என்று சொல்லிவிட்ட நிலை. (இரத்தம் அசுத்தமாகி கழிவாக இருந்தது, காரணம் கல்லீரல் செயல் இழந்துவிட்டது) சிறுநீர் சரியாக செல்லவில்லை. அறுவைசிகிச்சை பண்ணவேண்டும் என்று கூறினார்கள். மலவாசல் இயற்கையாய் மலத்தை வெளியேற்றும் செயலை இழந்துவிட்டது. தினமும் செயற்கையான முறையில் இனிமா கொடுத்து நானே வெளியேற்றும் நிலை. மலக்குடல் மோசமான நிலையில் குடல் இறக்கம் உண்டாகி அடிவயிற்றுக்கு கீழே பலூன் மாதிரி வீக்கம் அடைந்துவிட்டது.

உடலில் ஹெரனியாவை அறுவைசிகிச்சை மூலம் அகற்றாவிட்டால் உடனே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயமுறுத்தினார்கள். மூளைக்கு செல்லும் நரம்பு பாதிப்பு ஆகிவிட்டது என்றதால்  பேசியதையே திரும்ப திரும்ப ஞாபகம் இல்லாமல் பேசினேன். உடல் முழுவதும் புண்ணாகி அதில் இருந்து சீல்வடிய ஆரம்பித்தது. துர்நாற்றம் எடுத்தது. படுக்க முடியாது. உடல் முழுவதும் அரிப்பு, வேதனை தாங்க முடியாத அளவு வாழும் பொழுதே நரகவேதனை, நரகவாழ்க்கையை அனுபவித்தேன். என்னுடைய பிரச்சனைகள் கோவிலுக்கு சென்றும், பரிகாரம் செய்தும், பலவிதமான விரதங்கள் இருந்தும் எதிலும் குணமாகவில்லை. மொத்தத்தில் ஏன் பிறந்தேன் என்ற நிலையில் வாழ்ந்தேன்.

என்னுடைய துன்பத்திற்கு காரணம் நான் பால்யவயதில் இளமையிலே செய்த வாலிப சேட்டைகள். என்னை பார்க்கும் போது மற்றவர்கள் கண்களுக்கு நல்லவனாக காட்சி அளிப்பேன். எனக்குள் காம உணர்வுகள் அதிகபடியாக தோன்றியதால் நான் செய்த தவறுகள் ஏராளம். பெண்கள் மனம் வருந்தி மணல்வாரி தூற்றியும் தங்கள் வருத்தத்தை வெளிபடுத்தினார்கள். இது எல்லாம் சேர்ந்து எனக்கு வியாதி துன்பத்தை தந்தது. நான் செய்த தவறுகளை அறுபது வயதில் உணர்ந்தேன்.

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையில் (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) உள்ள செயல்முறைகளை பின்பற்றி மனபாரத்தை சிவசித்தன் முன்னிலையில் அனைவரிடமும் இறக்கி வைத்தேன் என்னுடைய மனபாரம் குறைந்தது. என் உடலில் உள்ள வெப்பம் குறைந்தது. இன்று நரகவாழ்வு மாறி ஆனந்தமான வாழ்வு வாழ்கின்றேன்.

இவ்வளவு குணமடைந்து அபூர்வமான அதிசயமான நிகழ்வுகளை உடலில் உணர்ந்தும், இன்றும் நான் சிவசித்தன் செயல்முறையில் தவறு செய்கின்றேன். சிவசித்தன் சொல்லையும் மீறி உணவின் மீதான ஆசையால் தவறிவிடுகின்றேன். என் உடல் கொடுக்கும் தண்டனையையும் உடனே உணர்கிறேன். இதற்கு முன் பல குருமார்களிடம் நான் செய்த தவறுகளை முழுவதும் வெளிபடையாக கூறாமல் பாவமன்னிப்பு பெற்று உள்ளேன். என் பாவம் தீர்ந்து இருந்தால் நான் இவ்வளவு வியாதி வேதனை உடலிலும் உள்ளத்திலும் பட்டிருக்கமாட்டேன். சிவசித்தன் ஒருவரே என்னை கருணையுடன் அப்பன் அம்மையாக இருந்து காப்பாற்றி நல்வாழ்வும் கொடுத்தார். அதே வேலையில் தவறுகள் செய்யும் பொழுது தண்டனையும் கொடுத்து அதை உணரவும் வைத்தார். அதனால் தான் மீண்டும் தவறு செய்ய யோசிக்கிறேன். தண்டனை பாவவிமோசனம் இரண்டையும் சிவசித்தனிடம் உணர்ந்தேன். சிவசித்தன் சாதாரண மனிதன் அல்ல படைத்தவன், என்னை புதிதாய் படைத்தவன், என்னிடம் புத்துணர்வை படைத்தவன். தண்டனை பெற்று இன்று நான் கஷ்டப்படும் பொழுது மற்றவர்கள் என்னைபார்த்து ஏன் இப்படி கஷ்டபடுகிறீர்கள்? மருத்துவமனைக்கு செல்லலாமே என்று  சொல்வார்கள். என்மனம் நினைக்கும் அறுவது வயது வரை நான் காணாத மருத்துவர்களா? யோகா நிபுணர்களா? செல்லாத கோவில்களா? செய்யாத பரிகாரங்களா? அனைத்தும் பயனற்றவை! ஏமாற்றுபவையே!.

சிவசித்தன் ஒருவனை முழுமையாக ஏற்றுக்கொண்டேன், உண்மையை உணர்ந்துவிட்டேன். சிவசித்தன் யார் என்று உணர்ந்துவிட்டேன். சிவசித்தனை போல் வேறு எவராவது மருந்து மாத்திரை இன்றி இறக்கும்வரை என்னை வாழவைக்க முடியுமா? மழையோ பனியோ, வெயிலோ எந்த சூழ்நிலையிலும் அதிகாலை எழுந்து குளித்து காய்ச்சல் தலைவலி என்று சிறிய வியாதிகூட இல்லாமல் வாழ வைக்கமுடியுமா? மழையில் நனைவேன் வெயிலில் காய்வேன். மற்றவர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் உறவுகளுக்கும் வாழும் வரை பாரம் இல்லாமல் தொந்தரவு கொடுக்காமல் வாழமுடியும் என்ற நம்பிக்கை சிவசித்தனால் பிறந்துள்ளது. மற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நான் இன்று என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். பிள்ளைகள் என்னை கவனிக்க வேண்டும், அவர்கள் என்னை பேண வேண்டும் என்ற நிலை எனக்குஇல்லை. சாப்பிட்டால் செரிக்கின்றது, படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கம் கிடைக்கின்றது. சிவசித்தனின்  திருநாமங்கள் கூறுவதால் இறையுணர்வு, பேரானந்தம் அனைத்தும் பெற்று நலமாக வாழ்ந்து வருகின்றேன்.

 

நன்றி சிவசித்தனே