ம. லோகேஷ்சுதன்

சிவசித்தன் சரணம்

பெயர் : ம. லோகேஷ்சுதன், வயது : 14

குலகுடும்ப தொழில் எண் : 13 02 024

என் மகனுக்கு தலைவலி பிரச்சனை 4 வருடங்கள் மிகவும் சிரமப்பட்டோம். தூக்கம் என்பதே கிடையாது. மூளைக்கு போகும் நரம்பில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். எந்த மருந்திற்கும் வலி குறையவில்லை, கூடிக் கொண்டே போனது. 5 ஸ்கேன் வரை எடுத்தும் ஏதுமில்லை என்றே கூறினார்கள்.

தீர்வு என்பது கிடைக்காத நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடாது என்றே கூறி அனுப்பினார்கள்.

பள்ளிக்கு 1 மாதத்தில் 10 நாட்கள் தான் போவான், 20 நாட்கள் தலைவலி என்று விடுப்பில் தான் இருப்பான். (டென்ஷன்) மன அழுத்தம் என்றும் சொன்னார்கள் மருத்துவர்களால் முழுமையான தகவலும், தீர்வும் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தூக்கத்தில் இழுவை போல் வரும். சோர்வாகிவிடுவான் திடிரென்று அதிகமாக சாப்பிடுவான் ½ மணி நேரத்திற்கொருமுறை திடீரென்று 1 நாள் முழுவதும் சாப்பிடவே மாட்டான். தலைவலி குறையவே இல்லை.

சிவசித்தனின் குலகுடும்ப தொழிலுக்கு வந்து பயிற்சியில் சேர்ந்த பின்பு தான் சிறிது, சிறிதாக தலைவலி 6 மாதத்தில் குறைந்தது. அதன் பின்பு தலைவலி வருவதேயில்லை. இன்று இயல்பாக இருக்கின்றான். நல்ல தூக்கத்துடனும், ஆரோக்கியமாகவும், படிப்பில் ஆர்வமுடனும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் போய் கொண்டு இருக்கின்றான்.

எங்கள் குடும்பமே அசைவம் தவிர்த்து சிவசித்தனின் மும்முறைகளில்

ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

சிவசித்தனின் உயிர் கலையில் சேர்ந்து அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

“நோய் பயம், மரண பயம், பண விரயம் இல்லை”.

நன்றி சிவசித்தன்