சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : J.சின்னச்சாமி
வில்வம் எண் : 15 05 037
வயது : 43
முகவரி : வில்லாபுரம், மதுரை.
அலைபேசி : +91 96296 23217
தொழில் : சென்டரிங் கம்பி (கட்டுமான பொருள்)

சிவசித்தன் கலைக்கு வரும் முன் உடல் எடை : 65 கிலோ
சிவசித்தன் கலைக்கு வந்துபின் தற்போது உடல் எடை : 54 கிலோ

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :

LOW PRESSURE இருந்தது அதற்கு ஹோமியோபதி ,மாத்திரை எடுத்துக்கொண்டேன். மாதம் 200 ருபாய் செலவு ஆகும். பார்வை குறைபாடு இருந்து, குறுக்குவலி, உடல் முழுவதும் அசதி, கொழுப்புகட்டி பிரச்சனைகள் இருந்தது.

ஒருபக்க தலைவலி வரும். தீர்வு வேண்டி சிவசித்தனிடம் வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

உடல் எடை குறைந்துள்ளது. உடலில் தற்போது எந்த தொந்தரவும் இல்லை. எல்லா வேலையும் இழுத்து போட்டு தானாகவே செய்கிறேன்.

சுமை அதிகமாக கூட தூக்க முடிகிறது. சோர்வு இல்லை. உடலில் நல்ல முன்னேற்றம் சிவசித்தன் கலையால் பெற்றுள்ளேன்.

சிவசித்தன் கலைக்கு முன்பு வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் மட்டும் தான் வேலை இருக்கும். தற்போது வேலை செய்ய ஆட்களுக்கு பிரித்து கொடுக்கிறேன்.

சிவசித்தன் அருளால் பணி சிறப்பாக நடைபெறுகிறது.சிவசித்தன் கலைக்கு முன் அசைவம் வாரம் மூன்று நாள் சாப்பிடுவேன்.

தற்போது அசைவத்தின் மீதான எண்ணமே இல்லை. வீட்டில் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள், சின்னச்சாமியா இப்போ எது கொடுத்தாலும் சாப்பிடமாடிங்கிறான் என்று.

வேலை பளுவின் காரணமாக இரவு உணவு ஒரு கரண்டி சிவசித்தன் அனுமதியுடன் எடுக்கிறேன். சிவசித்தன் கலைக்கு நான் என் மனைவி, என்னுடைய மகள் மூன்று பெரும் சிவசித்தன் கலைக்கு வருகிறோம்.

சிவசித்தன் திருநாமங்கள் ஒரு நாளைக்கு மூன்றுமுறை உச்சரிக்கிறேன். சிவசித்தன் திருநாமங்கள் உச்சரிக்கும்போது எனக்கு வேலைக்கு அடுத்தநாள் கூப்பிடுவதை உணர்கிறேன்.

எங்கள் தோட்டத்தில் மழைவர வேண்டி அமைதியாக 5 – 10 நிமிடம் அமர்ந்து சிவசித்தன் திருநாமங்கள் உச்சரித்தவுடன் மழை வருவதை உணர்கிறேன்.

வேலை நேரத்தில் நல்ல தண்ணீர் இல்லை என்றால் உப்பு தண்ணீர் குடிக்கிறேன்.சிவசித்தன் திருநாமங்கள் உச்சரிக்கும் போது உடல் லேசாக இருக்கிறது.

சிவசித்தன் அருகில் நிற்பது போன்ற உணர்வு, தீபஒளி தெரிவதை உணர்கிறேன். என் மகன் வெளியூர் செல்லும் போது சிவசித்தன் திருநாமக்கார்டு கொடுத்து வழிஅனுப்பிவிடுவேன்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிவசித்தன் கலைக்கு வந்து ஆரோக்கியமாக வாழ்கிறோம்.

உண்மைசிவசித்தன்