சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : M.சங்கரநாராயணன்
வில்வம் எண் : 17 08 006
வயது : 49
முகவரி : சிந்தாமணி, மதுரை.
அலைபேசி : +91 91592 45580
தொழில் : அப்பளம் (கூலி வேலை)
படிப்பு : ஆறாம் வகுப்பு

சிவசித்தன் கலைக்கு வருவதற்கு முன்பு உடல் எடை : 62 கிலோ
சிவசித்தன் கலைக்கு வந்த பின் தற்பொழுதைய எடை : 59 கிலோ

சிவசித்தன் கலைக்கு வந்த காரணம் :

பதினைந்து வருடங்களுக்கு முன்பு பக்கவாதம் வந்தது. இரண்டு கை, கால் ஒரு மாதமாக செயல் இழந்து இருந்தது. 20,000 வரை செலவு செய்தேன்.

பக்கவாதத்தால் குறுக்குவலி, முழங்கால்வலி, இடதுகால்வலி தொந்தரவு இருந்தது, இதற்கு 3,000ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை செலவு செய்தேன்.

தீர்வு கிடைக்கவில்லை. எட்டப்பார்வை தெரியாது. மனநிம்மதி இல்லை. இரவு தூக்கம் சரியாக இருக்காது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தது.

சளி தொந்தரவினால் நான்கு வருடங்கள் அதற்கும் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டேன், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

பல தீய காம எண்ணங்கள் பெண்கள் மீது சிந்தனைகள் வரும். மறக்க மாற்றம் பெற வேண்டி சிவசித்தன் கலைக்கு வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

குறுக்குவலி முழுமையாக குறைந்துவிட்டது. கைகால் வலி இல்லை. எடை அதிகமான பொருளை தூக்கும் போது மட்டும் பாதத்தில் வலி ஏற்படும்.

திருநாமங்கள் சொல்லியவுடன் சரியாகவிடும். உணவு நேரம் மாறினால் மலச்சிக்கல் ஏற்படுவதை உணர்கிறேன். சிவசித்தனை எண்ணுவதால் தீய காம எண்ணங்கள் மாறிவருவதை உணர்கிறேன்.

மனநிம்மதியுடன் இருக்கிறேன். தூரத்து பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதை உணர்கிறேன். மழை இடி, மின்னல் வரும்போது மனஅழுத்தம் பயம் ஏற்படும்.

தற்போது சிவசித்தன் திருநாமங்கள் சொல்லும் போது இடி, மின்னல் விலகி செல்வதை உணர்கிறேன். மனதைரியம் வந்துவிடும்.

சிவசித்தன் திருநாமங்கள் ஒரு நாளைக்கு நான்குமுறை உச்சரிக்கிறேன். நேரம் கிடைக்கும் போதும் சொல்கிறேன், சிவசித்தன் திருநாமங்கள் உச்சரிக்கும் போது அமைதியாக இருப்பதை உணர்கிறேன்.

வேலை சிறப்பாக முடிந்து மனநிறைவு பெறுகிறேன்.

உண்மைசிவசித்தன்