சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : கு.முனியசாமி
வில்வம் எண் : 15 01 201
வயது : 59
முகவரி : திருத்தங்கல், சிவகாசி.
அலைபேசி : +91 94886 65316
தொழில் : காலண்டர் வேலை

பயிற்சிக்கு முன் உடல் எடை : 80 கி
தற்பொழுதைய உடல் எடை : 53 கி

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :

பிரஷர் இருந்தது, பதினைந்து ஆண்டுகள் முன்பு கல்லடைப்பு ஆபரேஷன் செய்தேன், ஐந்து ஆண்டுகள் முன்பு குடல் இறக்கம்(Herenia) ஆபரேஷன் செய்தேன்.

மூட்டுவலி மூன்று வருடங்களாக இருந்தது, அதற்கு மூன்று லட்சம் வரை செலவு செய்தேன். குணமடையவில்லை. சித்தமருத்துவம், ஆயுர்வேதமருத்துவம், செய்வினை கோளாறு பார்க்கவும் ஒருமுறை சென்றுள்ளேன்.

எங்கு சென்றும் என்னுடைய உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

சிவசித்தன் கலையால் மூட்டுவலி பிரச்சனை முழுமையாக தீர்ந்துள்ளது. இரவு 10.00மணிக்கு உறங்கினால் அதிகாலை 3.30 – 4.00 மணிக்குள் எழுந்துவிடுகிறேன்.

தற்போது உடல்நிலை நல்ஆரோக்கியத்துடன் உள்ளேன். மூட்டுவலி தொந்தரவினால் வேலைக்கு செல்வதை தவிர்த்தேன். இப்போது சொந்தமாக வேலை செய்து வருகிறேன், எனக்கு போதுமான வருமானம் வருகிறது.

சிவசித்தன் திருநாமங்கள் நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன். சொல்லும்போது கை புல்லரிக்கிறது. உடலில் ஒரு அசைவு ஏற்படுகிறது.

சிவசித்தன் திருநாமங்கள் கூறிவிட்டு சென்றால் வேண்டிய காரியம் சீக்கிரம் நடைபெறுகிறது. சிவகுரு எனக்கு தெய்வம். வேறுயாரும் எனக்கு நல்வழி கற்றுத்தரவில்லை.

மேலும் எந்தவிதமான எண்ணங்கள் இல்லாமல் என்னை சிவசித்தன் ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொடுத்து காப்பாற்றுகிறார்.

உண்மைசிவசித்தன்