ம.சித்ரா

சிவசித்தனே சரணம்

பெயர் : ம.சித்ரா

வில்வம் எண் : 13 03 119

வயது : 20

(கல்லூரி மாணவி, இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்.)

எனக்கு சைனஸ் தொந்தரவு இருந்தது. தினமும் காலையில் எழுந்தவுடன் தும்மல் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். பின்பு காய்ச்சல் அடிக்கடிவரும். இதற்கிடையில் 2013, 2014, ஆகிய ஆண்டுகளில் படிப்பதற்காக வெளியூரில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது நெற்றியில் அலர்ஜி வந்தது. விடுமுறை நாட்களில் மதுரைக்கு வரும்பொழுது அலர்ஜிக்காக ஆயுர்வேத மருந்துகளையும், காய்ச்சல், மற்றும் சளிக்காக ஆங்கில மருந்துகளையும் வாங்கிச்செல்வேன். நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து மாத்திரைகளாவது எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். அதன் உடன் சேர்த்து, காய்ச்சல் வரும்போது அதற்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படி மாத்திரைகளையே நம்பி வாழ்ந்த எனக்கு அதனிடம் இருந்து விடுதலை கிடைத்தது சிவசித்தனின் வாசியோகத்தில் சேர்ந்த பிறகுதான். இப்பொழுது சைனஸ் பிரச்சனையும், கழிவு வெளியேற்றத்தால் படிப்படியாக குறைந்துவிட்டது. அலர்ஜியும் இல்லை. காய்ச்சலும் வருவதில்லை. மூன்று வருடமாக ஆரோக்கியமாக இருக்கின்றேன். “பிணியும் இல்லை. உடல் பிணி பற்றிய பயமும் இல்லை”.

நன்றி சிவசித்தனே!